அரிமா முனைவர். இ. கே. தி. சிவகுமார்

அன்புடையீர் வணக்கம்,

இந்தியாவும், கழிவறைகளின் அவசியமும்!

     இந்திய போன்ற அதிக மக்கள் தொகை பெருகி வரும் வளரும் நாடுகளில் கழிவறைகள் மிக மிக அவசியம். ஒவ்வொரு வீடும் சுத்தமான கழிவறை பெற்றால்தன் நாடு சுகாதார மேம்பாட்டில் மேன்மைபெறும். ஆனால் இன்றைய அறிவியல் வளர்ந்து விட்ட நிலையிலும் நம் நாட்டில் சுத்தமான கழிவறைகள் என்பது கனவாகவே உள்ளது. ஆகவே இதில் அதிக கவனம் தேவை.

உலகம் முழுவதும் முறையான கழிப்பறைகள் இல்லாதவர்கள் 250 கோடிப் பேர் எனவும், அவர்கள் திறந்தவெளியைக் கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள் என்பது அவலம். இதில் இந்தியாவில் மட்டும் 60 கோடிக்கும் மேலானவர்களுக்கு இன்றளவும் கழிவறை வசதி இல்லாத அவலநிலை உள்ளது. இதை போக்கிட அரசுகள் திட்டமிட்டாலும் முழுமையான செயலாக்கம் காலத்தின் கட்டாயம்.

பல சமூகத் தொண்டு அமைப்புகள், தன்னர்வமிக்கோர் முனைப்போடு செயல்படுவது பாராட்டுக்குரியது. அனால் கழிவறைகள் தானே என்று அலட்சியல் காட்டுவோரால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம். இன்று சுற்றுப்புற சுகாதாரக் கோட்டால் அதிக புதுப்புது நோய்கள் பாக்டிரியா, வைரஸ் அமீப மற்றும் நுண்கிருமிகளின் வாயிலாகக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வயிற்றுபோக்கு, காய்ச்சல், நிமோனியா உள்ளிட்ட பலவகை நோய்களுக்கு ஆளாகி அவதியுறுகின்றனர். மேலும் முழுமையான சுகாதார அறிவு எட்டாத நிலையில் 48% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

எதிர்கால சந்ததியினர் நலமுடன் வாழ வழிவகுக்க வேண்டும். இதற்கு “மக்கள் முழுமையாக மனது வைத்தால் மட்டுமே” கழிப்பறை சுதந்திரம் என்பது இந்தியாவிற்கு வந்து சேரும்!

ஆகவே வீட்டுக்கு வீடு கழிப்பறையை உருவாக்குவோம் வளமான இந்தியாவின் கனவை நிறைவேற்றுவோம்

அன்புடன்,
முனைவர் இ.கே.தி.சிவகுமார்